Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானிலிருந்து விழுந்த வித்தியாசமான விண்கல்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (18:05 IST)
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடல்பகுதி அருகே விழுந்த வித்தியாசமான விண்கல் பற்றிய வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

மே 21 அன்று ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை பகுதி அருகே வானில் ஒரு விண்கல் வந்து கொண்டிருந்தது. நிலப்பரப்பின் அருகில் வந்ததும் பயங்கரமாக எரிந்து ஒளிவீசி பின்னர் அனைந்து மறைந்தது. அது வீசிய ஒளியில் ஆஸ்திரேலிய தெற்கு பிராந்தியமே பகல் போல காட்சியளித்தது.

இதுபற்றி நாஸா விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே அந்த விண்மீன் விழுந்ததை வீடியோ எடுத்த பலபேர் அதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் இது பற்றி கூறும்போது “இந்த விண்கல் சூரியனை சுற்றிவரும் வால்மீன்கள் ஏதாவது ஒன்றிலிருந்து உடைந்து வந்த சிறிய பகுதியாக இருக்கலாம். அது வானத்தில் வீசிய ஒளியானது ஒரு சிறிய அணு குண்டு வெடித்தால் ஏற்படுத்தும் அளவு ஆற்றலுக்கு நிகரானது. அதிலிருந்து ஆற்றல் உமிழப்பட்டபோது ஹைப்பர்சோனிக் அலைகள் அதிகமாக வெளியேறியது பதிவாகியுள்ளது” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments