கனடாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது எட்டு உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளான்.
கனடாவின் ஒட்டாவை சேர்ந்த மார்க், ஹெதர் மக்கினன் தம்பதியினரின் மகன் கமரன் (14). கமரன் மூளை ரத்த ஒட்ட நாள நெளிவு நோய் காரணமாக கடந்த 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
செயற்கை கருவிகள் உதவியிடன் கடந்த 24ஆம் தேதி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவனது எட்டு உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன்வந்துள்ளனர். இந்நிலையில் 24ஆம் தேதி குடும்பத்தினர் சூழ நின்ற நிலையில் மாலை 6.40 மணியளவில் கமரனின் உயிர் பிரிந்தது.
இதுகுறித்து கமரனின் உறவினர் ஒருவர் கூறுகையில், ’துயரத்திலும் ஒரு நிறைவாக மற்றவர்களுக்கு வாழ்க்கையை பரிசாக கொடுக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளான், இது அனைவருக்கும் நம்ப முடியாத பேரிடியாக அமைந்தது’ என தெரிவித்துள்ளார்.
கனடாவில் மட்டும் 4,500 நபர்கள் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.