Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2016 (10:54 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

 
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டியூஷன் ஆசிரியராக இருந்த கரீம்(60) என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.
 
ஆனால், கடந்த ரம்ஜான் பண்டிகையன்று அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் கரீம் என்ற மதகுருவோ.., ‘நான் அந்த பெண்ணை கடத்தி வரவில்லை. எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. இவளை எங்கள் அன்பளிப்பாக உங்களிடம் ஒப்படைக்கிறோம். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் அவளை அழைத்து செல்லலாம்’ என அவளது பெற்றோர் கூறியதால் நான் எனது ஊருக்கு அழைத்து வந்தேன்’ என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், அந்த மதகுருவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments