தென் கொரியாவில் ஒரே நேரத்தில் 4000 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தென்கொரியாவில் 1954-ம் ஆண்டு சன் ம்யூங் மூன் என்பவர் ஒரு தேவாலயத்தை நிறுவினார். அதனைத் தொடர்ந்து 1961-ம் ஆண்டிலிருந்து அந்த தேவாலயத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் சன் ம்யூங் மூன் கடந்த கடந்த 2012-ல் உயிரிழந்தார். இதனையடுத்து சன் ம்யூங்கின் மனைவி தன் கணவர் விட்டுச் சென்ற பணியை செய்ய தொடங்கினார். வருடா வருடம் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டு 64 நாடுகளை சேர்ந்த 4,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.