Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை நோய்க்கு 2 பேர் பலி: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:52 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்கூட 3 பேர் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரண்டாவது நபர் அங்கு உயிரிழந்தார் என ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உயிரிழந்தவர் குறித்த எந்தவித அடையாளத்தையும் ஸ்பெயின் அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது ஸ்பெயின் நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பலியாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments