ஆஸ்திரேலியா நாட்டில் 150 நாட்களாகத்தொடர்ந்து மராத்தான் ஓடி சாதனை செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே.
இவர், கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறததால் மராத்தான் ஓட்டத்தில் கவனம் செலுத்தினார்.
அதன்படி, ஆஸ்திரேலியா கண்டத்தைச் சுற்றி வர அவர் முடிவு செய்தார்.
அதன்படி, 106 நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு மாரத்தான் ஓடி இங்கிலாந்து வீராங்கனையான கெட் ஜேடனின் சாதனையை முறியடிக்க நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
அதன்படி, 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா முழுவதும் மாராத்தான் ஓடி முர்ரே சாதனை படைத்தார்.
இவர், மொத்தம் 150 நாட்கள் என 6,300 கிமீ தூரத்தை ஓடி முடித்துள்ளார்.
மராத்தான் ஓடி உலக சாதனை படைத்த முர்ரேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.