நியூசிலாந்து நாட்டில் பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நாட்டின் தலை நகர் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் எதிர்பாராத விதமாக இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிறது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், தீயை அணிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், 92 அறைகள் கொண்ட இந்த விடுதியில், 11 பேர் விபத்தில் மாயமாகியுள்ளதாகவும், இதுவரை 52 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தீவிபத்தில் பலியானோர்க்கு பிரதமர் கிறிஸ் ஹாப்பின்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.