அப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி தற்போது புதிதாக காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப மேதையுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புற்று நோயால் மரணமடைந்தார்.இந்நிலையில் அவரது மனைவியான லோரன் பவெல் ஜாப்ஸ்(49) மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
பவெல் ஜாப்ஸ் வாஷிங்டன் டி.சியின் முன்னாள் மேயர் அட்ரியன் பெண்டியை(42) காதலித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அட்ரியன் பெண்டியும் தனது மனைவியிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் விரைவில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.