Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரியாவைத் தாக்கத் தயாராக அமெரிக்க, பிரிட்டன் படைகள்!

Advertiesment
சிரியா
, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2013 (17:06 IST)
சிரியாவில் அதிபர் ஆசாத் படைகள் போராளிகள் பகுதியில் படு மோசமான போரைத் தொடுத்து வருகிறது. விஷ ரசாயனக் குண்டுகள் மூலம் ாக்கியதில் இதுவரை பலர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 322 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.
FILE

இந்நிலையில் அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயுத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றன.

பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் படைகளும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன.

அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியத்தரைக்கடலுக்கு விரைகிறது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும்.

இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக...

செல்லும் மற்ற சிறு கப்பல்களும் ஏவுகணைகளை வீசி தாக்கும். மேலும் ஜோர்டானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனை தாக்குதலில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது.

மத்தியத்தரைக்கடல் டவுலான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிரியா மீது தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளது.

மத்தியத்தரைக்கடலில் பிரிட்டன் ஒரு நீர்மூழ்கி கப்பலை நிறுத்திவைத்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தும் அவசியம் ஏற்பட்டால் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இத்தாக்குதலுக்கு பயன்படுத்த கூடும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil