Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

காசநோய் தடுப்பு மருந்து கொரோனா சிகிச்சைக்கு உதவுமா? ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆலோசனை!

Advertiesment
shall TB vaccine use in corona treatment
, புதன், 1 ஏப்ரல் 2020 (18:19 IST)
கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் தடுப்பு மருந்தான பிசிஜி யை அளிக்கலாமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் மூலம் உலகம்  முழுவதும் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42,000 பேர் பலியாகியுள்ளனர். இதன்  காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுபடுத்துவதில் உள்ள முக்கிய பிரச்சனையாக இந்த நோய்க்கு எந்தவிதமான மருந்துகளும் இல்லை என்பதுதான்.

இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆய்வில் இருந்த ஆராய்ச்சியாளர்கள்  காசநோய் தடுப்பு மருந்தின் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என ஆலோசித்து வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்குக் காரணம் பிசிஜி எனப்படும் காசநோய் தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் ஜப்பான்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.  ஆனால் பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் இல்லாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பாதிப்பு  4 மடங்கு அதிகமாகியுள்ளது.

இதனால் காசநோய் தடுப்பு மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியுமா என ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 4,000 மருத்துவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா தடுப்பு பணியின்போது உயிரிழந்தால் ரூ.1 கோடி நிதி ! டெல்லி முதல்வர்