Publish Date: Mon, 27 Feb 2017 (10:23 IST)
Updated Date: Mon, 27 Feb 2017 (10:25 IST)
சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து திரைப் பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். இதில் விருது வழங்குபவர்கள் பெயர் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம்பெற்றிருப்பதால் அவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.
இன்று ஆஸ்கர் வென்ற சிலர்..
# சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது: மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது.
# சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது: பென்ஸஸ் படத்திற்காக வியோலா டேவிஸ் தட்டிச்சென்றார்.
# சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது: சூசைட் ஸ்குவாட் படத்தில் பணிபுரிந்த அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் வென்றனர்.
# சிறந்த சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருது: அரைவல் படத்தின் சவுண்ட் பொறியாளர் செல்வாயின் பெல்லிமாரே.
# சிறந்த அனிமேட்டட் குறும்படம்: ‘பிபர்’ என்ற படத்திற்காக ஆலென் பரிலாரோ மற்றும் மார்க் சொந்தெய்மர் வென்றனர்.
# லா லா லேண்ட் படத்திற்காக புரடக்ஷன் டிசைனர் டேவிட் வாஸ்கோ மற்றும் செட் டிசைனர் சாண்டி ரெனால்ட்ஸ் ஆஸ்கர் விருது வென்றனர்.
# சிறந்த விசுவல் எபெக்: ‘தி ஜங்கிள் புக்’ படத்திற்காக ரோபட் லிகடோ, ஆடம் வெல்டிஜ், ஆண்ட்ரிவ் ஆர் ஜோன்ஸ் மற்றும் டேன் லெம்மன் வென்றனர்.
Sugapriya Prakash
Publish Date: Mon, 27 Feb 2017 (10:23 IST)
Updated Date: Mon, 27 Feb 2017 (10:25 IST)