Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படி பட்ட படம் தமிழ்ல வரலியேன்னு வருத்தப்பட்டேன்… இளையராஜா பாராட்டிய ஈரானிய சினிமா!

இப்படி பட்ட படம் தமிழ்ல வரலியேன்னு வருத்தப்பட்டேன்… இளையராஜா பாராட்டிய ஈரானிய சினிமா!
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (17:52 IST)
சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்கான அக்கா குருவி திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

உலக சினிமா ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை சொல்லுவார்கள். அந்த அளவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற இந்த படத்தை இயக்குனர் மஜித் மஜீது இயக்கியிருந்தார். ஒரே பள்ளியில் படிக்கும் அண்ணன் தங்கை இருவர். தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்து விடுகிறான். அப்பாவுக்கோ புது ஷூ வாங்கும் அளவுக்கு வசதியில்லை. அதனால் அண்ணன் காலையிலும் தங்கை மதியமும் மாற்றி மாற்றி அண்ணனின் ஷூவைப் போட்டு செல்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இந்நிலையில் பள்ளியில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் வெல்வோருக்கு ஷூ பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அண்ணன்.. வென்றானா? ஷூ கிடைத்ததா ?

இந்த சின்ன கதையை வைத்துக்கொண்டு ஈரானின் அரசியல் சூழ்நிலை, குடும்ப உறவுகள் ஆகியவற்றை மிக அற்புதமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர். வெளியாகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தபடத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். உயிர், மிருகம் மற்றும் சிந்து சமவெளி ஆகியப்படங்களை இயக்கிய சாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது, சமீபத்தில் நடந்த சென்னை திரைப்பட சர்வதேச விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்க உள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். இதையடுத்து படம் வரும் மே 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

webdunia

நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய இளையராஜா இப்படி பட்ட படங்கள் தமிழில் வருவதில்லையே என நான் வருத்தப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் “ஒரு உயரிய சிந்தனை ஒரு கலைஞனைப் போட்டுத் தாக்கினால்தான், அவனால் இப்படிப்பட்ட உயர்ந்த சினிமாவை எடுக்க முடியும். இந்த படத்தின் சாராம்சம் மாறாமல் இயக்குனர் சாமி தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு ரீமேக் செய்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 1 ஆம் தேதி தொலைக்காட்சியில் வலிமை… அடுத்த செம்ம அப்டேட்டை கொடுத்த ஜி தமிழ்!