அடடா… விஷ்வல் Treat… வெளியானது ரசிகர்கள் காத்துக் கிடந்த அவதார் 2 டீசர்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (12:44 IST)
அவதார் 2 படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர்  பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சுமார் 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தற்போது அவதார் 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க விஷ்வல் ட்ரீட்டாக அமைந்துள்ளன டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள். இந்த டீசர் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 வயது பெண்ணை காதலிக்கும் 45 வயது சூர்யா.. தயாரிப்பாளர் சொன்ன தகவல்..!

‘ஆல் இன் அழகுராஜா’ படத்திற்கு பின் கார்த்தியின் அடுத்த காமெடி படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

‘ஜனநாயகன்’ படத்தை வாங்கிய நிறுவனம் திடீரென பின்வாங்கியது ஏன்? கைகொடுத்த இன்னொரு நிறுவனம்..!

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. மலேசிய அரசு விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

வெளியான 21 நாட்களில் ரூ.1000 கோடி வசூல்.. பட்ஜெட் வெறும் ரூ.250 கோடி தான்.. சாதனை செய்த படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments