Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“சாட்டிங்” - சைபர் உலக நட்பு

Advertiesment
“சாட்டிங்” - சைபர் உலக நட்பு

Webdunia

“இன்டர்நெட்”, “ப்ரௌஸிங்”, “சாட்டிங்” போன்ற வார்த்தைகள் தான் இப்போது பெரும்பாலான இளைஞர்களால் பேசப்படுபவை. ஒவ்வொரு தெரு முனையிலும் முளைக்கும் இன்டர்நெட் சென்டர் இதற்குச் சான்று. இதில் சாட்டிங் என்பது கம்பியூட்டர் முன் உட்கார்ந்து ஊர், பெயர், முகம் தெரியாதவரோடு நட்பு கொள்வதாகும். தொலைவில் உள்ள நண்பர்களோடு மற்றும் உறவினரோடு தொடர்பு கொள்வதில் இது உதவினாலும் அதிகப் படியாக இது முன் பின் தெரியாதவரோடு பேசவே பயன்படுத்தப் படுகிறது.

சாட்டிங் தொடங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை :

பொய்கள் ஜாக்கிரதை

நிஜ வாழ்வில் பொய் சொல்ல இத்தனை பேர் இருக்கும்போது புனைப் பெயரைக் கொண்டு பேசும் பொழுது எத்தனை பேர் பொய் சொல்வார்கள்! உங்களைக் காதலிக்கும் அந்த 25 வயது வாலிபன் நிஜ வாழ்வில் 45 வயதான 3 குழந்தைகளின் தந்தையாக இருக்கலாம்.

நிதானம் அவசியம்

இரண்டு/மூன்று முறை பேசியதால் மட்டும் யாரையும் நம்பி எந்த அவசர முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.* உங்களைப் பற்றிய விவரங்களை வீட்டு விலாசம், தொலைபேசி எண் இவற்றைக் கொடுப்பதில் கவனமாக இருக்கவும்.

நீங்கள் யார்?

உங்கள் சைபர் நண்பரை நிஜ வாழ்வில் சந்திக்க விருப்பமிருந்தால் உங்களைப் பற்றி மிகைப் படுத்தி கூறுவதைத் தவிர்க்கவும். அப்படி விருப்பமில்லை, நேரம் கழிக்கத் தான் பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் தான் ஐஸ்வர்யா ராய் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லhரி மாணவி ஒருவர் கூறினார்: “நானும், வினோதும் டெய்லி சாட் செய்தோம். அவன் அமெரிக்காவில் இன்ஜினியர் என்றான். ஒரு மாதம் கழித்து, என்னைப் பார்க்க 1 வாரம் லீவில் வருவதாகச் சொன்னான். அவனைச் சந்தித்தேன். சினிமா, டின்னர் என்று சென்றோம். வீட்டில் பொய் சொல்லி விட்டு இரண்டு நாள் அவனோடு பாண்டிச்சேரி சென்றேன். 6 மாதத்தில் வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னான். இப்போ ஒரு வருஷம் ஆகுது. ஆனால் ஆளையே காணவில்லை.

உடல் நலக் குறைவால் வெளியே செல்ல முடியாதோர், மற்றும் நேரத்தைக் கழிக்க விரும்புவோருக்கு சாட்டிங் கனவுலகத்தை உலா வர ஒரு எளிய முறையாகும். சாட்டிங்கில் நல்ல நண்பர்கள்/காதலர்கள் யாருக்கும் கிடைத்த கதைகளே கிடையாதா?

உண்டு. ஆனால் அவை மிகக் குறைவு. சாட்டிங் செய்யவும். ஆனால் கவனத்தோடு!

நிழல்களை நிஜம் என்று நம்பி விடாதீர்கள

Share this Story:

Follow Webdunia tamil