Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்

மதுரை மார்ச் 13, மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம்) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமானதும், மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்திரனுக்கு சுவாமி சாபவிமோஷனம் கொடுத்ததால் தஷ்யாயனம் சொல்லக்கூடிய சூரிய ஒளி, வடபுறமாக இருந்து பாதங்களில் பட்டு மேல் எழுந்து, தெற்கு நோக்கி நகரும் உத்தராயணம் நிகழ்வு இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 நாட்களும், செப்டம்பர் மாதம் 12 நாட்களும் என வருடத்தின் இரண்டு முறை சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந் நிகழ்ச்சி தினமும் இருபது நிமிடம் வரை நடிக்கிறது. மேலும் சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. ஏன்பது இக்கோயிலிலின் தனி சிறப்பு. மேலும், ஆலயத்தின் மூலவரான முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பதும் ஐதீகம். அந்த வகையில் சிறப்பு பெற்ற முக்தீஸ்வரர் திருக்கோயிலில் சூரிய ஒளி விழும் நாட்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு, அவ்வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆண்டிற்கான சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பஜிக்கும் நிகழ்வு துவங்கி நடைபெற்று வரும் நிலையில் சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால், இந்நிகழ்வினை காண மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.