Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

தென் மாவட்ட மக்களின் வேதனையை தீர்க்க முதலமைச்சர் முன்வருவாரா?

தென் மாவட்டங்களில் நடைபெறும்  குளறுபடியை தீர்ப்பதற்கு, தீர்வு காணமா  திமுக அரசு என்று ,மக்கள் விவாதித்து வருகிறார்கள். குறிப்பாக கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி தேதியை, கேரள அரசு மாற்றி அறிவித்துள்ளதால் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் தேதி அறிவிக்கப்படும் நிலையில் ,இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளா அரசு வேறு தேதியை அறிவித்ததால் பரபரப்பும், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் திக்கு தெரியாமல், இன்றைக்கு இந்த அரசு மீது நம்பிக்கை வைத்த இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.  தமிழக கேரளா எல்லைகளான கூடலூர் அருகே, விண்ணேற்றி பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயிலிலே, சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் விழாவினை, ஒரு மாதத்திற்கு முன் நடத்துவதாக தேதியை அறிவித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம், ஒட்டுமொத்த குளறுபடிக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறது.  இந்த கோவில் தமிழகத்தினுடைய வனப்பகுதியில் இருந்த போது, கடந்த சில ஆண்டுகளாக கேரளா அரசு இக்கோயிலை சொந்தம் கொண்டாட தொடங்கி இருக்கிறது.  எப்படி முல்லை பெரியார் அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு வதந்திகளை பரப்பி, புதிய அணை கட்டிய தீருவோம் என்று ஒற்றை காலில் நிற்கிற கேரளா அரசு, இன்னைக்கு அதை தொடர்ந்து இந்த கண்ணகி கோவில் உரிமையும் இன்றைக்கு கை வைக்க தொடங்கியிருக்கிறார்.  அந்த வழிபாடு என்பது நாம் காலம் காலமாக நடத்தி வருகிற வழிபாடு. அது நம்முடைய உரிமை, அந்த வழிபாட்டு உரிமையில் கூட இன்றைக்கு கேரளா அரசு கை வைத்திருப்பது குளறுபடியும், இரு மாநில மக்களுடைய உறவிலே, கேள்விக்குறியாக இருக்கும் வகையிலும், இடைவெளி ஏற்படுகின்ற நடவடிக்கையாக அமைந்திருப்பது வேதனையின் வேதனையாக இருக்கிறது.  இந்த கோயில் தமிழகத்தில் இருந்த போதிலும், தொடர்ந்து இன்றைக்கு கேரளா அரசு கோயிலை சொந்தம் கொண்டாட, இந்த இரண்டு ஆண்டுகளிலேயே தான் முழுமூச்சாக,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்து வருகிறது. கூடலூரில் இருந்து பெரும்பாலும் பக்தர்கள் நடந்து சென்று கோயில் தரிசனம் செய்து வருகின்றனர்.  ஜீப் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டுமானால், குமுளி சென்று அங்கிருந்து அங்கிருந்து கேரள வனப்பகுதிக்கு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதியாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பாக தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒரு ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நடத்துவதாக வந்தது.  இந்த சூழ்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் அமைப்பினர்,  மே 6ல்  கண்ணகி சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடுவது எனவும், இரு மாநில கலெக்டர்களின் கூட்டம் மார்ச் 24 நடத்த வேண்டும் எனவும், இடுக்கி கலெக்டருக்கு மாவட்ட ஆட்சித் தேர்வுக்கு மனு அனுப்பினர் .அதன் அடிப்படையில் இடுக்கி மாவட்டம் தேனி மாவட்டத்திற்கு தெரிவித்திருப்பதாகத தகவல்கள், செய்திகள் இப்போது வந்துள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பிலே தேதி முடிவு செய்து ,தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் இதுதான் நடைமுறை, இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்பே தேதியை இடிக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, இதிலே ஏதேனும் ஒரு சூட்சமம் இருக்கிறதா? என்று மக்கள் அச்சப்படுகிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.  சித்ரா பௌர்ணமி மே 5ஆம் தேதி வருகிறது, ஆனால் அடுத்த நாள் 6ம் தேதி திருவிழா கொண்டாடப்படும் என தெரிவித்திருப்பதால் ஏற்பட்ட குளறுபடி ,கண்ணகி பக்தர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சி அதிர்வலையும் ஏற்படுத்தி இருக்கிறது.  முல்லைப் பெரியாறு பிரச்சனை,  மங்களதேவி கண்ணகி கோயில்  பிரச்சனை,நம்முடைய தமிழகத்தில் சேர்ந்திருக்கிற பகுதிகளை, கேரளா பகுதியை சேர்ப்பதற்கான ரீசர்வே முறையாக, டிஜிட்டல் நம்முடைய நிலப்பகுதியை  எடுத்துக் கொள்கிற முயற்சியை, அந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அம்மா ஆட்சியில் 2014 ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், நிறைவாக அந்த பேபி அணையை சீர் செய்து 152 அடி உயர்த்திக் கொள்ளலாம் என்று ஒரு வரலாற்று தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்.  தென்  மாவட்டகளான மதுரை ,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட  மக்கள், விவசாயிகள் முல்லைப் பெரியாறு மீட்டு தந்த அம்மாவிற்கு மிகப்பெரிய நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தை இதே மண்ணிலே மண்ணிலே நடத்தினார்கள்.  ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்ற முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளிலே முல்லை பெரியார் குறித்து,  உரிய நடவடிக்கைக்கு மட்டும் அல்ல, அது குறித்து பேசுவதற்கே அவர் தயங்குகிறார்.  கேரளா அரசு புதிய அணை கட்டுவோம் என்று சொன்னவுடன், ஐந்து மாவட்டங்களில் விவசாயி திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை எடப்பாடியார் நடத்தினார்.  விவசாயிகள்  உரிமையிலும் இன்றைக்கு  குளறுபடி ஏற்படுத்தியும் மட்டுமல்லாது, கண்ணகி கோவில் உரிமையிலே கேரளா தலையிடுவது என்பது, தமிழகத்தினுடைய உரிமையை பறிக்கிற செயலாக தான் இப்போது பார்க்கப்படுகிறது. முதலமைச்சர்உரிய நடவடிக்கை எடுக்க எடுத்து, குளறுபடி கலைக்க முன்வர வேண்டும்,  இல்லை என்றால் கண்ணகி கோவிலில் உரிமையை நிலைநாட்ட, எடப்பாடியார் கவனத்திற்கு எடுத்து சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.