Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில் 35 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.12 ம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதுகின்றனர்.அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வழங்கப்படும். 180 பறக்கும் படையினர் ஆய்வுப் பணியில் உள்ளனர்.காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நீலகிரியில் அதிக சத்து மாத்திரையை உண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவிகள் ஜெனரல் வார்டிலும், ஒருவர் ஐ சி வார்டிலும் கண்காணிப்பில் உள்ளார். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.