Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

ராகுல்காந்திக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது

மதுரையில் ராகுல்காந்திக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் கைது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியினை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் அக்கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் ரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் போராட்டம் நடத்தினர்கள், மேலும் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்கு உள்ளே போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு - முள்ளு ஏற்பட்டது, இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்