Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

மதுரை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +12 பொதுத்தேர்வை மொத்தம் 37457 பேர் எழுதுகின்றனர்

மதுரை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +12 பொதுத்தேர்வை மொத்தம் 37457 பேர் எழுதுகின்றனர்- இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வினை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவ மேல்நிலை +12 பொதுத்தேர்வில் 323 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 18734 பேரும், மாணவியர்கள் 18723 பேரும் ஆக மொத்தம் 37457 பேரும் 116 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளதாகவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து வினாத்தாள்கள் 30 வழித்தடங்கள் வழியாக ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், இப்பொதுத் தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள், நிலையான படை உறுப்பினர்கள் என 3400 தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இத்தேர்வினை கண்காணிக்க உள்ளனர். இவ்வாண்டு 352 மாற்றுத்திறனாளிகள் மாணவ/மாணவியர்களில், கண்பார்வை குறையுள்ள/மனவளர்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 80 மாணவ/மாணவியர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு 4 மையங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் 1231 பேர் தேர்வெழுதவுள்ளனர். இவ்வாண்டு மேல்நிலை பொதுத் தேர்விற்கு உறங்கான்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி புதிய தேர்வு மையமாக அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது