Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

குடல் புண்களை குணமாக்கும் முளைக்கீரை !!

முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவையூட்டுவது மட்டுமல்லாமல் பசியையும் தூண்டுகிறது. முளைக் கீரைச் சாற்றில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அதை அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும். முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும். முளைக்கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. முளைக்கீரை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்கள் குணமாகும். முளைக் கீரையானது இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் உதவுகிறது.. முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கிறது.