Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் உருளைக்கிழங்கு போண்டா செய்ய !!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:17 IST)
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 300கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 8
எலுமிச்சம் பழம் - 1
கொத்துமல்லி, உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கை மசித்து வாணலியில் போட்டு கிளறி, கொத்துமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

உருளைக்கிழங்கை நன்கு கிளறி தேவையான அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதன்பிறகு, கடலை மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கரைத்து அதில் முக்கி எண்ணெய்யில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments