சுவையான வெஜ் பிரியாணி செய்ய !!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (17:37 IST)
தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ
கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோ
மீல் மேக்கர் - 100 கிராம்
பிரெட்துண்டுகள் - 4
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 6
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
புதினா, கொத்தமல்லி தலா 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சு இலை, அன்னாசிபூ - தலா 2



செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும். பட்டை சிறு துண்டுகளாக கட் செய்து நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி, புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதக்கல், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி காய்கறிகள் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது அத்துடன் தயிர் சேர்க்கவும். மீல் மேக்கர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.

மீல் மேக்கர் ஒரு கப் அரிசிக்கு 1 ½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கவிடல் நன்கு கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். கலந்து 5 நிமிடம் முழு தீயில் மூடி வேக விடவும்.
வேக வைத்தல் 5 நிமிடம் கழித்து பொரித்த பிரட்துண்டுகள், புதினா சிறிது, எலுமிச்சை பிழிந்து, கலர் (விரும்பினால்) சேர்க்கவும்.

பிரட் துண்டுகள் மூடி மேலே கனமான பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் சிம்மில் வேகவைத்து இறக்கவும். 30 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான வெஜ் பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராட்சைப் பழத்தின் வியக்கவைக்கும் மருத்துவ குணங்களும் உடல்நலப் பயன்களும்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? எந்தவிதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments