Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பருப்பு ஸ்டஃப்டு பரோட்டா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கடலைப்பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
 
மேல் மாவுக்கு:
 
கோதுமை மாவு - 200 கிராம்
நெய் - தேவையான அளவு.
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.
 
வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக  உருட்டவும். இதுதான் பூரணம்.
 
பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூப்பரான பருப்பு ஸ்டஃப்டு பரோட்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

அடுத்த கட்டுரையில்
Show comments