Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரள ஸ்பெஷல் பழம் பொரி செய்ய...!

Advertiesment
கேரள ஸ்பெஷல் பழம் பொரி செய்ய...!
இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம்  என்றும் சொல்வார்கள்.
 
பழம் பொரி செய்ய தேவையான பொருட்கள்:
 
மைதா - 1/2 கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
 
பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு  அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாக் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்