Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தக்காளி பிரியாணி செய்வது எப்படி....?

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:01 IST)
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
பழுத்த தக்காளி - 8
புதினா - ஒரு கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பட்டை- சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். புதினாவையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், புதினா, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கிய பிறகு இரண்டரை கப் தண்ணீர் செய்து கொதிக்க விடவும். பிறகு பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாறவும். சுவையான தக்காளி பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments