Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவையான காளான் தொக்கு செய்ய...!!

சுவையான காளான் தொக்கு செய்ய...!!
தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரக தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
முதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி  வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகை போடுங்கள் கடுகு  வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள். கூடவே நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக  வதங்கும் வரை கிளறி விடுங்கள்.
webdunia
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகள், மில பொடி, சீரக தூள், ஜீரக பொடி இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
 
மசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு நன்கு வதக்கி, 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். அவ்வளவிதான் அருமையான காளான் தொக்கு தயாராகிவிடும். இந்த காளான் தொக்கு சப்பாத்தி, பூரி, தோசை,இட்லி, சாதம், இடியப்பம் போன்ற  பொருட்களுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடற் பருமனால் ஏற்படும் ஆபத்துகளும் குறைக்கும் வழிகளும்!!