Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்ய...!!

Webdunia
வயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
 
பிரண்டை - 1 கப் (இளம்)
புளி - 50 கிராம், 
சின்னவெங்காயம் - 10 
தக்காளி - 1 
பூண்டு - 7 பல் 
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப 
வெல்லம் - சிறிது 
கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு - தலா 1/2 தேக்கரண்டி 
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, 
கறிவேப்பிலை - சிறிதளவு 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடி செய்ய வேண்டியவை:
 
நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் 
தனியா - 2 தேக்கரண்டி 
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
 
செய்முறை:
 
பிரண்டையை நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம். தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
 
கடாயில் பொடி செய்யவேண்டிய பொருள்களை, ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு,  சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும். இதில் புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு  இறக்கவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த பிரண்டை குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments