தேவையான பொருள்கள்:
கொண்டை கடலை - 150 கிராம்
உருளை கிழங்கு - 100
இஞ்சி,பூண்ட பேஸ்ட் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1மூடி
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 ஸ்பூன்
பட்டை,சோம்பு,கிராம்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய், மிளகு, சீரகம்,பட்டை, சோம்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.கடலை ,உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி மேலே குறிப்பிட்ட எல்லா தூள்களையும் போட்டு வதக்கி தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி பின்பு கடலை, உருளை கிழங்கு, அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.