Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது தெரியுமா....?

Advertiesment
ஆன்மீகம்
வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை  ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும்.

உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும்,  வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும்.
 
நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை  வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. 
 
கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச்  செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள்.
 
நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை  வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும்.
 
தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை  ஆற்றல்கள் அதிகரிக்கும்.
 
மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, வீட்டில் சண்டைகளும் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீக்க முடியுமா...?