Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி....?

Webdunia
வீட்டை பராமரிப்பது என்பதே ஒரு சிறந்த கலையாகும். வீடுகளில் வரவேற்பு அறை மட்டும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால்  உண்மையில் சமையல் அறைதான் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். அப்படி பார்த்தால் எல்லா அறைகளுமே சுத்தமாக வைத்திருப்பது  மிகவும் அவசியம்.
வீட்டின் அமைப்பு, பாதுகாப்பு, சவுகரியம், அலங்காரம் ஆகிய மற்ற சமாசாரங்கள் எல்லாம் அப்புறம்தான். இரு வேளையும் அடுப்புமேடையை  சுத்தப்படுத்துவது நல்லது. 
 
தினம் தரையையும், வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். சமைக்கும் நேரம் தவிர மற்ற  நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவிவைப்பது நல்லது. தினமும் குப்பையை  அகற்றிவிடுவது நல்லது.
 
சமையலறையிலும் ஆங்கர் அமைத்து அடுப்பு துடைக்க, கை துடைக்க தனித்தனி துணிகளை உபயோகியுங்கள். அவற்றை அவ்வப்போது அலசி  உலர்த்துங்கள். முடிந்தவரை தேய்த்த பாத்திரங்களை துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள். 
 
இரும்பு வாணலி, தோசைக்கல், ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும். எக்காரணம் கொண்டு விரித்த தலையுடன் சமைக்க  வேண்டாம். சோம்பல் படாமல், மாதம் ஒரு முறை கிச்சன் பல்பைக் கழட்டித் துடையுங்கள். பருப்பு வகைகள் கொண்ட பிளாஸ்டிக்  சாமான்களை வைக்காதீர்கள். பிசுக்கு ஏறும்.
 
எறும்பு பவுடர், கரப்பான் பூச்சி தொல்லையை தடுக்க மருந்து தெளிப்பது ஆகியவற்றை செய்து அதன் மீது பேப்பரை போட்டு வையுங்கள்.  இப்படி செய்வதால், மருந்துகளின் நெடி சமான்களில் ஏறாது. குழந்தைகளும் தொட வாய்ப்பில்லை. சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் இரும்பு பாத்திரங்களை கவிழ்ந்து வைத்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments