Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...!!

அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...!!
ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். 
தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை  உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம்.
 
தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் கூடிய அல்சரில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அல்சர் இருந்தால், தயிரை அதிகம் சாப்பிட்டால், விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.
 
முட்டைகோஸில் அமினோ அமிலங்கள், எல்-குளூட்டமைன் மற்றும் ஜெபர்னேட் போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, அல்சர் வராமல் தடுக்கும்.
 
வாழையில் அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.
 
கைக்குத்தல் அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமாக நிறைந்துள்ளது. எனவே அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும்.
 
சீஸில் எண்ணற்ற ஆரோக்கியமாக பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிட்டால், அல்சரை  உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, அல்சர் எளிதில் குணமாகிவிடும்.
 
பூண்டுகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை உணவில் சேர்க்க உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். குறிப்பாக அல்சர் உள்ளவர்கள், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன்  கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயிர் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையுமா...?