குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சமையலறை குறிப்புகள்..!

Webdunia
சாறு பிழிந்த எலுமிச்சம்பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல் உருளைக்கிழங்கு வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
முருங்கைக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைக்க ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.
 
கீரையை வேகவிடும்போது, சிறிது எண்ணெய்யை அதனுடன் சேர்த்து வேகவைத்தால், கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
 
வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது, அத்துடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்துச் செய்தால், சுவையும் மணமும்  மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.
 
வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறைத்  தெளிக்கவும்.
 
வாழைப் பூவை நறுக்கிச் சுத்தம் செய்வதே பெரிய வேலை, இதோ ஓர் எளிய முறை.... பூவை ஆய்ந்ததும் முழுசாக மிக்ஸியில் போட்டு இரண்டே சுற்று சுற்றினால் போதும் ஒரே அளவில் பூவாக உதிரும்.
 
பிடிகருணையை வேகவைக்கும்போது சில கொய்யா இலைகளையும் சேர்த்து வேகவைத்தால் சிறுதுகூட காரல் இருக்காது.
 
சிறிது சர்க்கரை கலந்த நீரில், கீரையை ஊறவைத்து பிறகு சமையல் செய்து சாப்பிடுங்கள். கீரை தனிச் சுவையாக இருக்கும்.
 
வெங்காயம், பூண்டு, பலாக்கொட்டை ஆகியவற்றை சுலபமாக உரிக்க கைகளில் இரண்டு மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது  நல்லெண்ணெய் விட்டு நன்றாக அவற்றை தேய்த்து வைத்து விடுங்கள். மறுநாள் உரிக்க ஒரு நிமிடம்கூட ஆகாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments