தாத்தா, பாட்டிகள் கேட்கும் விடுகதைக்கு பதில்களை தெரிந்து கொள்ளுங்கள். அறிவாளி என்ற பட்டம் சூட்டிக்கொள்ளுங்கள்.
சுடாத நெருப்பு, இருட்டில் உதவுவான் - அவன் யார்?
உலகமே உறங்கினாலும் அவர்கள் மட்டும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள் - அவர்கள் யார்?
ஊரைச் சுமந்தபடி உயரத்தில் பறப்பான் - அவன் யார்?
பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது - அது என்ன?
சிவப்பானவன் எரிவான், கறுப்பானவன் தெரிவான் - அவை என்ன?
இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானம் அல்ல - அது எது?
நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அவன் யார்?
என்ன விடை கண்டுபிடித்து வீட்டீர்களா? அடுத்த பக்கத்தில் பதில்கள் உள்ளன. சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
விடைகள்
டார்ச் லைட்
கடிகார முட்கள்
விமானம்
தேங்காய்
நெருப்பு, புகை
வானவெடி