Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட் - காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.500

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:51 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில்   தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்   அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது உரையாற்றி அவர் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவாகும். சராசரியாக 3 ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை  எட்டியுள்ளோம் என தெரிவித்தார்.  அதன் பின் அறிவிவித்த சலுகைகள் ஆவது:
 
* நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். 
 
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை. 
 
*விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. 
 
*நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 
 
*கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. 
 
*தேசிய சுகாதார கொள்கையின் கீழ் 1.5 லட்சம் மையங்கள் ஏற்படுத்தப்படும். 
 
* காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.
 
*முதல்முறையாக குஜராத்தின் பரோடாவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 
 
* பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments