விஜய்யில் புதிய நிகழ்ச்சி என் சமையல் அறையில்
, வெள்ளி, 27 நவம்பர் 2009 (12:13 IST)
இது வரை பல சமையல் நிகழ்ச்சிகளில், பல சமையல் வகைகளான செட்டிநாடு, ஆச்சி சமையல், ஆகிய பல விதங்களை பார்த்தாகிவிட்டது!சமையலிலும் புதுமையை புகுத்த தயாராகி விட்டது விஜய் டிவி. கண்களுக்கு மட்டும் விருந்தாக அமையாமல், உங்கள் சுவைக்கு ஏற்றார்ப் போல பலவகையான விருந்து உணவுகளை சமைக்கும் முறைகளையும் விவரமாக எடுத்துக் கூற வருகிறது இந்நிகழ்ச்சி! வழக்கமாக ஒரு உயரிய உணவகத்தின் மூத்த சமையல் நிபுணர் வந்து பல புதிய உணவு வகைகளை அவரின் பாணியிலே மிகவும் அழகாக சமைத்துக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம்!'
ப்ரீத்தி என் சமையல் அறையில்' நிகழ்ச்சியில், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி அனுஹாசன் அவர்கள் வந்து, அவருக்கு பிடித்த உணவு வகைகளை அவருக்கே உரிய ஸ்டைலில் அவரே சமைத்தும் காட்ட வருகிறார்.இந்த புதிய சமையல் நிகழ்ச்சி வரும் நவம்பர் 29 முதல் ஞாயிறுதோறும் மதியம் 1 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகயிருக்கிறது.இவர் சமைக்கும் உணவு வகைகள், இக்கால பாஸ்த்தா மற்றும் பீட்ஸாவில் துவங்கி, பாட்டி வைத்தியம், அம்மாவின் கைப்பக்குவம், இந்திய உணவு வகைகள், மேற்கத்திய உணவு வகைகள் என எல்லாவித உணவு வகைகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது. இவரின் கைப்பக்குவம், குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் உணவு வகைகள் துவங்கி, விருந்து சாப்பாட்டிற்கு சமைக்கும் வரையிலான எல்லா சமையல் குறிப்புகளையும் இவர் செய்து காட்ட உள்ளார். உணவு சமைப்பதோடு நின்றுவிடாமல், இவரின் திரையுலக நண்பர்கள், உறவினர்கள், தாயார் மற்றும் பலரும் இவரின் சமையலை சாப்பிடவும், பலவித சுவாரஸ்ய கலந்துரையாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.மேலும் வாரம் ஒரு தீம் என்ற வகையில், டிராவெல் ஸ்பெஷல், பிக்னிக் ஸ்பெஷல், பள்ளிக்கு செல்லும் போது செய்ய வேண்டிய மதிய உணவு ஸ்பெஷல், அலுவலகத்திற்க்கு செல்லும் போது செய்யக் கூடிய
எளிமையான மதிய உணவு ஸ்பெஷல் என அவரிடன் உள்ள பலவகையான சமையல் கைவண்ணங்களை அனுஹாசன் நேயர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரைவில் வருகிறார்.இந்த புதுவித 'என் சமையல் அறையில்' நிகழ்ச்சியில் ஒரு சில விஐபிகளும் அழைக்கப்படுகிறார்கள். நவம்பர் 29 முதல், ஞாயிறுதோறும் மதியம் 1 மணிக்கு விஜய் டிவியில் பார்க்க தயாராகுங்கள்.