ரஜினிகாந்த் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:33 IST)
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில மாதங்களில் தொடங்கவுள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய  பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களிலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி, ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' படத்தில் வில்லனாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது தெரிந்ததே.
 
மேலும் இந்த படத்தில் ரஜினி-விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments