Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா விவகாரம் ; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு : நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:28 IST)
குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த விவகாரம் பூதாகரம் ஆகியது. எனவே, லஞ்ச ஒழுப்புத்துறை இதை விசாரித்து வந்தது. ஆனால், இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன்  இந்த வழக்கை தொடர்ந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. குட்கா விவகாரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதேபோல், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 
குட்கா விவகாரத்தில் இந்த தீர்ப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments