Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு நன்றி கூறிய பலியானவர்களின் குடும்பத்தினர்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (07:34 IST)
சமீபத்தில் தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறுவதாக சென்ற அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் அதனை பெரிதாக விளம்பரப்படுத்திய நிலையில் நடிகர் விஜய் எந்தவித ஆரவாரமும் இன்றி நேற்றிரவு தூத்துகுடிக்கு சென்று பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.
 
தூத்துகுடிக்கு நள்ளிரவு சென்ற விஜய், தூத்துகுடி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து பலியானவர்களின் குடும்பத்தினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் செய்தார். 
 
மேலும் இன்று, விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் வருகை குறித்து பலியானவர்களின் குடும்பத்தினர்களில் ஒருவர் கூறியபோது 'நேற்று நள்ளிரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எங்கள் வீட்டின் முன் நின்றது. யார் என்று கதவை திறந்து பார்த்தபோது விஜய் வந்திருந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுக்கு ஆறுதல் கூறி எங்கள் துன்பத்தில் பங்கெடுத்து கொண்டார். அதுமட்டுமின்றி ரூ.1 லட்சம் பணமும் கொடுத்தார். அவருக்கு எங்கள் நன்றி' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments