துப்பாக்கிச் சூடு சம்பவம்: நள்ளிரவில் நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (07:31 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நடிகர் கமல், ரஜினி ஆகியோர் ஏற்கனவே நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிதியுதவி வழங்கினர்.
 
இந்நிலையில் நடிகர் விஜய், துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். பகலில் சென்றால், ரசிகர்கள் பட்டாளம் கூடிவிடும் என்பதற்காக நள்ளிரவில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் விஜய்.

மேலும் விஜய் காயமடைந்தவர்களை இன்று மருத்துவமனைக்கு சென்று சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments