Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசிக ஒரு வன்முறை கட்சி: டாக்டர் ராம்தாஸ்

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (22:09 IST)
அதிமுக கூட்டணியில் ஏழு மக்களவை தொகுதிகளை பெற்ற பாமகவின் ராம்தாஸ் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:
 
சிதம்பரத்தில் எதிரணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடையாளம் கொடுத்தது நான் தான். அந்த கட்சியின் கொடியை பார்த்தாலே தற்போது பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். விசிக ஒரு வன்முறை கட்சி. 
 
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க மீண்டும் பிரதமர் மோடியிடம் மனு கொடுப்போம். கண்ணியமான முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். பாமக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது.
 
மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும் ராம்தாஸ், அன்புமணி ஆகிய இருவரையும் காமெடியன்கள் என்றும் திமுக விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்த டாக்டர் ராமதாஸ், 'திமுக தேர்தல் அறிக்கையில் கதாநாயகன், கதாநாயகி என யாருமே இல்லை என்றும், காமெடியன் மட்டுமே உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments