Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (08:55 IST)
தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை பாரத பிரதமர் நரேந்திரமோடி சேதப்பகுதியை வந்து பார்வையிடவில்லை என்றும், இடைக்கால நிவாரண நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்கள் கூட யாரும் கஜா புயல் பகுதிக்கு செல்லவில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பை பிரதமர் இன்னும் பார்வையிடாதது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'பிரதமர் நரேந்திர மோடி தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வெளி நாட்டில் இருக்கிறாரா? என்றும் தெரியவில்லை. ஒருவேளை, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கிற போது வந்தாலும் வரலாம்' என்று கூறியுள்ளார்.

மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசூ 15 ஆயிரம் கோடி ரூபாயை கேட்டுள்ளதாகவும், அந்த பணம் நிவாரண பணிக்கு போதாது என்பதால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments