அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, ஆயுஷ்மானுக்கு 40 ரூபாயா? ராகுல்காந்தி விளாசல்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (23:07 IST)
இந்திய மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து ஒரு லட்சத்து முப்பாதாயிரம் கோடி அம்பானிக்கு அள்ளி கொடுத்த பிரதமர் மோடி, மக்களின் திட்டமான ஆயுஷ்மான் திட்டத்திற்கு வெறும் ரூ.40 மட்டும் கிள்ளி கொடுத்துள்ளது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி வழிவகை செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்திற்கு வெறும் 40 ரூபாய் மட்டும் ஒதுக்கியது ஏன்? என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.    

ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் மொத்தம் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றால் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் கோடியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40 மட்டுமே கிடைக்கும் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments