Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கர்நாடக முதல்வராவேன்: சித்தராமையா பேச்சால் கர்நாடகாவில் பரபரப்பு

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (08:01 IST)
சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் எட்டு எம்.எல்.ஏக்கள் குறைவாக இருந்ததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற ஜனதாதள் கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
 
காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தபோதிலும் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அவர் எந்த நேரத்திலும் குமராசாமி ஆட்சியை கவிழ்ப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று ஹசனில் நடந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியபோது, 'மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன். 2வது முறையாக முதல்வராவதை எதிர்க்கட்சிகள் கைகோர்த்து தடுத்துவிட்டதால் எதிர்பாராதவிதமாக என்னால் முதல்வராக முடியவில்லை, ஆனால் அதுவே இறுதியல்ல' என்று கூறியுள்ளது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் குமாரசாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருப்பதாக சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments