Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரசாமி பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்! தேவகவுடா அழைப்பு

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (15:37 IST)
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இன்று கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி. அவருக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் நாளை ராஜீவ் காந்தி நினைவு நாள் என்பதால் வரும் புதன்கிழமை கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பாஜகவுக்கு எதிரான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்று வரும் புதன்கிழமை மு.க.ஸ்டாலின் பெங்களூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பிரபல காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பதவியேற்பு விழாவை பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் ஒரு வாய்ப்பாகவும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

திருச்செந்தூரில் ராட்சத அலை.. கடலில் குளித்த 2 பெண்களுக்கு கால் முறிவு..!

அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம்! அதானி அதிரடி அறிவிப்பு..!

நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

சமாஜ்வாடிக்கு ஓட்டுப்போட மறுத்த பெண் கற்பழித்துக் கொலை? - உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments