Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொல்வது 'காப்பாற்றுவோம்', செய்வது 'கடத்துவோம்': பாஜகவை கிண்டலடித்த குஷ்பு

Advertiesment
சொல்வது 'காப்பாற்றுவோம்', செய்வது 'கடத்துவோம்': பாஜகவை கிண்டலடித்த குஷ்பு
, புதன், 5 செப்டம்பர் 2018 (23:10 IST)
பெண்களை காப்பாற்றுவோம் என்று சொல்லி கொண்டிருக்கும் பாஜக, செயலில் பெண்களை கடத்தி கொண்டிருப்பதாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் என்பவர் நேற்று விழா ஒன்றில் பேசியபோது, 'தொண்டர்களே.  நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் போனில் பேசலாம். நீங்கள் என்னிடம், நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அதற்கு உங்களுடைய உதவி தேவை என்று சொல்லிவிட்டால் போதும்… அந்த பெண்ணை கடத்தி உங்களிடம் ஒப்படைப்பேன்' என்று கூறினார்.

பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இதுகுறித்து தனது டுவிட்டரில், '‘உனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறதா? என்னிடம் சொல். நான் அந்தப் பெண்ணை கடத்தி வருகிறேன்.  – பாஜக சொல்வது ‘பெண்களை காப்பாற்றுவோம்’. செய்வது – ‘பெண்களை கடத்துவோம்! என்று கிண்டலுடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.குஷ்புவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொல்வது 'காப்பாற்றுவோம்', செய்வது 'கடத்துவோம்': பாஜகவை கிண்டலடித்த குஷ்பு