கோலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகை

Webdunia
வியாழன், 17 மே 2018 (16:32 IST)
சின்னத்திரை பிரபலமான தெய்வமகள் சத்யா(வாணி போஜன்) பெரியதிரையில் கதாநாயகியாக நடிக்கிறார். சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வருவது  ஒன்றும் புதிது கிடையாது.
இந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலம் ப்ரியா பவானிசங்கர், மேயாத மான் என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனால் பெரிய திரையில் நல்ல பெயர் கிடைத்ததோடு பிரபலம் அடைந்தார். இந்நிலையில் மேலும் ஒரு டிவி பிரபலம் ஹீரோயினாகியுள்ளார்.  இவர் தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் வாணி போஜன். அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் அவதாரம்  எடுத்துள்ளார்.
தான் ஹீரோயினாகியுள்ளதை வாணி போஜன் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். என் மகன் மகிழ்வன் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படத்தின் ஹீரோயினாகியுள்ளார் வாணி போஜன். அந்த படத்திற்கு என்.ஹெச்.4 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை அறிவிப்பதில் மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments