Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திருப்பம்: கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் திட்டம்

Webdunia
வியாழன், 17 மே 2018 (16:30 IST)
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இல்லை என்றாலும் தனிப்பெரும் கட்சி என்ற வகையில் பாஜகவை அம்மாநில ஆளுனர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து பாஜகவின் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா, மேகாலயா, மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது காங்கிரஸ் கட்சிதான். ஆனால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி செய்து வருகிறது.
 
இந்த நிலையில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 16 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், தனிப்பெரும் கட்சி என்ற வகையில் தங்களை ஆட்சி அமைக்க விடுக்க வேண்டும் என்றும், மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் கவர்னரிடம் கோவா காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
 
கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளதால் ஆளும் பாஜக கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் கோவா ஆளுனர் காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments