Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக்கர் சின்னத்திற்கு நீதிமன்றம் தடை : தினகரன் அதிர்ச்சி

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (14:23 IST)
டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 
ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன்.எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 
 
அந்த வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தினகரன் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினர் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.
 
மேலும், தினகரனின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு முடிவு எடுக்க வேண்டும் எனவும், இரட்டை இலை வழக்கை 3 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
எனவே, வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை குக்கர் சின்னத்தை தினகரன் தரப்பு பயன்படுத்தக் கூடாது. இது தினகரனுக்கு கிடைத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments