அக்‌ஷய் குமார் வெளியிட்ட ரஜினி வீடியோ - மீட் மிஸ்டர் 3.0 !

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (17:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது.
படத்தில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் costliest மூவி என விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 500 கோடி பொருட்செலவில் 3Dதொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.
பல ஆண்டுகள் உழைப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை  நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். 
 
எந்திரன் படத்தில் வெர்ஷன் 2.0வை அறிமுகப்படுத்தி இருப்பர். அந்த ரோபோ தான் 2.0 படத்தில்  முக்கியமான காட்சிகளில் வரும். இதே போல 2.0 படத்தில் அடுத்த படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்க போகும் 3.0 ரோபோவை அறிமுகப்படுத்தி இருப்பார். 
 
அந்த காட்சி தான் படத்தில் திருப்புமுனையாக இருக்கும். தற்போது அந்த காட்சிகளை நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments