Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒற்றை யானை செய்யும் அட்டூழியம் ! ஓட்டம் பிடிக்கும் மக்கள்

ஒற்றை யானை செய்யும்  அட்டூழியம் ! ஓட்டம் பிடிக்கும் மக்கள்
, சனி, 1 டிசம்பர் 2018 (17:06 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் , வரப்பாளையம் போன்ற வரப்பகுதிகளில் உலா வரும் ஒற்றை யானை அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை பயமுறுத்திவருகிறது. இதனால் பொதுமக்கள் தம் உயிருக்கு பயந்து காப்பான இடத்தை தேடி ஓடிவருகின்றனர்.
விவசாய நிலம் இங்கு அதிமாக இருப்பதால் தினமும் அதிகாலையில் இங்கு வரும் ஒற்றை யானை தனக்கு தேவையான அளவு பயிர்களை உண்டுவிட்டு செல்வதாக மக்கள் கூறுகிறார்கள்.
 
குருடாம் பாளையம் பகுதியில் நேற்று மாலை வேளையில் வந்து பயிர்களை செமத்தையாக தின்று விட்டு காட்டுக்குள் நடையை கட்டும் என்றும் பார்த்தால் இது போகவில்லை.

கூட்டமாக யானைகள் வந்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒற்றை யானை வந்தால்தான் சிரமம். எப்போது என்ன செய்யும் என்றே தெரியாது.
 
இந்நிலையில் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கூற விரைந்து வந்த அவர்கள் யானையின் குணம் அறிந்து யாரும் யானையை நெருங்க வேண்டாம் என அறிவுறித்தியுள்ளனர்.
 
பிரபுசாலமன் படத்தில் வருவதுபோல் ஒரு கும்கி யானை வந்தால்தான் இந்தக் காட்டுயானை இடத்தை காலி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்: நியூசிலாந்தில் பரபரப்பு